மார்கழி
பீடை மாதமென சொல்லி திருமணத்தை ஒதுக்குது ஒருவிதமானக் கூட்டம்
முகூர்த்த மாதமென திருமணத்தை நடத்துது வேறுவிதமானக் கூட்டம்
கல்யாண மண்டபம் காற்று வாங்க தொடங்கி விட்டது இப்போது
கச்சிதமாய்க் காய் நகர்த்தி சிக்கனக் கல்யாணமும் நடக்குது இப்போது
அஷ்டமி நவமி நல்லதல்ல என்கிறது வேறுவிதமான தமிழர்க் கூட்டம்
அஷ்டமி நவமி அற்புதம் என்கிறது மறுவிதமான தமிழர்க் கூட்டம்
கோலத்துடன் வரும் மார்கழியே வருக குதூகலத்துடன் மகிழ்வைத் தருக!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment