Saturday, 18 December 2021

போரிலும் சூதிலும் குதிரை

 

போரிலும் சூதிலும் குதிரை 

குதிரையை நம்பி மன்னன் போரிட சென்றானா என்பதும் தெரியாது 

மன்னனை நம்பி குதிரை போர்க்களம் சென்றதா என்பதும் தெரியாது 

வெட்டி வீழ்த்திடுவேன் என்ற ஆணவ நம்பிக்கையில் சென்றானா தெரியாது

மன்னன் மாண்டால் தாவிப் பிழைக்கும் கனவோடு குதிரை சென்றதா தெரியாது 

குதிரையேறி போரிட்ட போர்க் காலம் எங்கும் மாயமாய் மறைந்ததும் புரியுது 

குதிரையை வைத்து சூதாடும் காலம் எங்கும் நிரந்தரமாய் வந்ததும் புரியுது!

- தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment