Sunday, 19 December 2021

தொடரக் கூடாது இத்துயர்

 

தொடரக் கூடாது இத்துயர் 

இடியும்வரை காத்திருந்தது இடியுமென    முன் கூட்டியே தெரிந்து இருந்ததாலா?

 இடிந்ததும் இடிந்ததுபோல் பேசுவது இடியாததையும் இடிக்கும் திட்டத்தாலா?

அறிவில்லாமல் அனுமதிக் கொடுத்து அடித்தளமற்ற பள்ளியைக் கட்டியது ஏன்?

கட்டியக் கயவர்களை உடனே தண்டிக்க சரியான சட்டம் இல்லாதது  ஏன்?

பள்ளியைக் கட்டிய பகுத்தறிவில்லா மூடர்கள் தமிழர்ப் பரம்பரைக்கே சாபக்கேடு              

கட்டி வைத்து உதைத்தால் நடக்காது எந்தக் கட்டிட வேலையிலும் முறைகேடு!

- தஞ்சை த இராமநாதன் 

2 comments:

  1. என் எண்ண குமறலையும் பிரதிபலிக்கிறது

    ReplyDelete
  2. ஏப்டிபட்ட உலகத்தில் வாழுந்து வருகிறோம்...

    ReplyDelete