மறுக்கவோ மறைக்கவோ முடியுமா?
வேட்டித் துண்டைப் போட்டு மோகன்தாசு வாழ்ந்த வாழ்வை மறக்க முடியுமா?
வேட்டித் துண்டைப் போட்டு பலபேர் வேடம் போடுவதை மறுக்க முடியுமா?
தீயவற்றை செய்யாதே என்ற அரிய தத்துவத்தை மறக்க முடியுமா?
நல்லவற்றை செய்யாத நாசக்காரக் கூட்டம் அதிகரிப்பதை மறுக்க முடியுமா?
நள்ளிரவில் பொன்னோடு பெண்ணை போகச் சொன்னதை மறக்க முடியுமா?
பட்டப் பகலிலேயே பாவச் செயல்கள் பல நடப்பதை மறுக்க முடியுமா?
பணத்தாளில் சிரிக்கும் மோகன்தாசின் முகத்தை மறக்க முடியுமா?
இந்நாள் அவலங்களை அவர் அறிந்தால் அழுவார் என்பதை மறுக்க முடியுமா?
- தஞ்சை த இராமநாதன்
2 Oct 2021
No comments:
Post a Comment