Sunday, 3 October 2021

மாறாதது அன்பு

 

மாறாதது அன்பு

உறவு மாறலாம் உருவம் மாறலாம்

அன்பு மாறாது உண்மையும் மாறாது

காலம் மாறலாம் கோலம் மாறலாம்

பிறப்பதும் மாறாது இறப்பதும் மாறாது

கட்சியும் மாறலாம் காட்சியும் மாறலாம்

சண்டையும் மாறாது சச்சரவும் மாறாது

வசதி மாறலாம் வாய்ப்பும் மாறலாம்

குணம் மாறாது மரபணுவும் மாறாது

கவர்ச்சி மாறலாம் கபடங்கள் மாறலாம்

உணர்ச்சி மாறாது உறுதியும் மாறாது

மொழி மாறலாம் பேச்சும் மாறலாம்

தூய அன்பு என்றென்றும் மாறாது!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment