நிதானமாகக் கொட்டும் அருவிகள்
கீழ் நோக்கி வீழ்ந்தாலும் வீழ்ச்சியாகாது நீர் அருவி
உயரே உயரே பறந்தாலும் பருந்தாகாது ஊர்க் குருவி
கொட்டும் மலைநீர் காற்றோடு பறந்தால் அது மலைச்சாரல்
பொழியும் மழைநீர் காற்றோடு பறந்தால் அது மழைச்சாரல்
மலைச்சாரலோ மழைச்சாரலோ பச்சைப் பசேலென பசுமைத் தோற்றம்
பச்சையோடு பச்சையாக பச்சோந்திகளின் பொய்மைத் தோற்றம்
விழுப்புரத்தில் விழும் கெங்கவரத்தின் வரம்தான் மொக்கை ஓடை அருவி
ஆகாயக் கங்கை குற்றாளம் கும்பக்கரை சுருளி கிளியூரோடு குரங்கு அருவி!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment