குறி வைத்துக் கேள்வி
கேள்வியே குறியானால் கேள்விக் குறிக்கு என்ன வேலை?
வாழ்க்கையே கேள்வியானால் கேள்விக்கு என்ன வேலை?
தெரிந்தப் பதிலுக்கு கேள்விக் கேட்பது முறையா?
தெளிவானக் கேள்விக்கு பதிலே இல்லாதது முறையா?
ஏன் என்ற கேள்வியை ஏன் கேட்கின்றோம்?
என்ன பதில் என்பதை அறியவே அதைக் கேட்கின்றோம்!
எப்படி என் கவிதை? என்பது கேள்வியானால்
ஆகா அருமை என்பது பதிலாகாதா?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment