அன்னமாக மின்னும் வண்ணம்
பாலை தண்ணீரிலிருந்து பிரிக்கப் பார்க்கும் அன்னமா இது?
தண்ணீரில் தெரியும் நிலவை பாலெனப் பார்க்கும் அன்னமா இது?
நிலவு வெளிச்சத்தால் பளிச்சென தெரியும் தண்ணீரின் வண்ணமா இது?
தெளிந்தத் தண்ணீரால் பளிச்செனத் தெரியும் நிலவின் வண்ணமா இது?
பலவகைப் பூக்கள் பூத்ததைப் போன்றே பூத்துக் குலுங்கும் வண்ணமா இது?
இத்தனை வண்ணங்களோடு நீந்தும் அன்னமாக மின்னும் வண்ணமா இது?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment