கடவுளும் மனிதனும்
கல்லைச் சிலையாக்கியதும் மனிதன் சிலையைக் கடவுளாக்கியதும் மனிதன்
கடவுளுக்கு மானிட உருவம் கொடுத்ததும் மனிதன் மானிட உருவத்தை வணங்க வைத்ததும் மனிதன்
கடவுளுக்கு வேட்டி சேலை உடுத்தியதும் மனிதன் கடவுளுக்குப் பொட்டோடு பூ சூட்டியதும் மனிதன்
ஏழை சாமி பணக்கார சாமி எனக் கடவுளைப் பிரிப்பதும் மனிதன் உண்டியலை வைத்து பணத்தைப் பறிப்பதும் மனிதன்
அத்தனை ஆற்றலையும் உள்ளகத்தே கொண்டவன்தான் மனிதன் கட உள் எனக் கடந்துப் பார்த்தால் கடவுளை உள்ளேயே உணர்ந்திடுவான் மனிதன்!
- தஞ்சை த இராமநாதன்
👍 🙏 💐
ReplyDelete