வந்தத் தேர்தலில் அந்தப் பக்கம் உங்கள் கூட்டணி வரும் தேர்தலில் இந்தப் பக்கம் உங்கள் கூட்டணி
தேர்தலில் சாதிக்காத கழிவுக் கூட்டணியும் உண்டு தேர்தலில் சாதிக்காக இழிவுக் கூட்டணியும் உண்டு
சதிக்காரர் கொள்ளைக்காக திருட்டுக் கூட்டணியும் உண்டு சாதிக்காரர் கொள்கைக்காக வறட்டுக் கூட்டணியும் உண்டு
கோடிகள் உதவியோடு அடாவடிக் கூட்டணியும் உண்டு கேடிகள் உதவியோடு அடிதடிக் கூட்டணியும் உண்டு
கொடுத்து வெல்லப் பார்க்கும் கூட்டணியும் உண்டு கெடுத்து கொல்லப் பார்க்கும் கூட்டணியும் உண்டு
தகுதி இல்லாதவர்களின் தரங்கெட்டக் கூட்டணியும் உண்டு மனம் கெட்டவர்களின் மானங்கெட்டக் கூட்டணியும் உண்டு
எல்லாம் மாறி வர வேண்டும் கசடற கற்ற கல்வியாளர்களின் கூட்டணி
அதுதான் மக்களால் மக்களுக்காக மாசற்ற பண்பாளர்களின் கூட்டணி!
- தஞ்சை த இராமநாதன்
Perfect sir 👌
ReplyDelete🤝
ReplyDelete