Saturday, 3 July 2021

வறுமையே போய்விடு

 

வறுமையே போய்விடு

பணத்தைப் பற்றியது வறுமையா?

மனத்தைப் பற்றியது வறுமையா?

பணத்தால் முடிவது முடிவில்லை!

மனத்தால் முடியாதது ஏதுமில்லை!

வெடியோடு விழா கொண்டாட்டம்!

அடுத்த வீடு பசியோடு திண்டாட்டம்!

வெடி விழாவை நிறுத்தியாச்சா?

பக்கத்தார் பசியை போக்கியாச்சா?

உதவியை சொல்லிக் காட்டுவதேன்?

உதவியவரை நாம் மறப்பதும் ஏன்?

கோவில் அர்ச்சனை பல கோடியில்!

அறிவீரா அவலம் தெருக்கோடியில்?

வீண் பேச்சு மீறிவிட்டது எல்லையை!

அது தருது பெரும் தொல்லையை!

சுதந்திரப் போர்வையில் தந்திரம்!

இவர்கள்தான் நாட்டிற்கு தரித்திரம்!

முன்வீடு பின்வீடு பேசனும் நம்மோடு!

இருப்பக்க வீடும் பழகணும் அன்போடு!

யாவரும் கேளிர் சொன்னது போதும்!

யார் நம் கேளிர் புரிந்தால் போதும்!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment