Saturday, 3 July 2021

தமிழச்சி வீரம்

 

தமிழச்சி வீரம்

குத்து வெட்டு இதுவா வீரம்?

உறுதியோடு மறம் அதுதான் வீரம்!

கோபத்தோடு செயல் அதுவா வீரம்?

ஆபத்தில் தற்காப்பு அதுதான் வீரம்!

உடுப்பில் உள்ளதா தமிழச்சி வீரம்?

பண்பில்தான் உள்ளது தமிழச்சி வீரம்!

உயிரைக் கொன்று குவிப்பதா வீரம்?

உயிரைக் காக்க குவிவதே வீரம்!

அறத்தோடு வீரம் தமிழர் வரலாறு!

முறத்தோடு வீரம் தமிழச்சி வரலாறு!

அடிமை அகல போராடிய வரலாறு!

இன்றும் அடிமை ஏதோ கோளாறு!

ஆங்கிலேயருடன் போர் அது சரி!

பங்காளியருடன் போர் எப்படி சரி?

வீரப் போரில் அக்கால சிலை பெண்!

குடிக்கும் பாரில் இக்கால சில பெண்!

கற்ற-பெற்ற பாடம் போதும் நமக்கு!

மனதில் வீரம்-தீரம் வேண்டும் நமக்கு!

போரிட்டு ஆண்ட தமிழினம் ஆள்க!

ஆளும் போது உணர்வோடு ஆள்க!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment