உப்பளம் முதல் அப்பளம் வரை உப்பு
கடல் நீரோடு கலந்து கரைந்த உப்பு!
பாத்தியோடு பாத்தியாய் இருந்த உப்பு!
நீரற்றப் பாத்தியில் படர்ந்த உப்பு!
குவியல் குவியலாய்க் குவிந்த உப்பு!
சோடியத்தால் வெண்மையான உப்பு!
குளோரைடால் குளுமையான உப்பு!
உவர்ப்பு சுவையை கொடுக்கும் உப்பு!
உழைத்தால் வாழ்வு கொடுக்கும் உப்பு!
உணவில் சுவையைக் கூட்ட உப்பு!
பதனப்படுத்தி உணவைக் காக்க உப்பு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment