Sunday, 4 July 2021

கொலுவில் மெய்மை

 

கொலுவில் மெய்மை

படிப்படியாக முன்னேற வேண்டும்    படிப்போடு முன்னேற வேண்டும்

படியேறாமல் படியை நீர் இகழாதீர்    படியாமலே முன்னேற நினைக்காதீர்

படி மேல் படி அறிவைக் குறிக்கும்          அடிப்படி அடிப்படையைக் குறிக்கும்

புல் பூண்டு புழு விலங்கு நிலை மாறும் மனிதமும் மகான் நிலைக்கு மாறும்

உயரே நிலைத்தது தெய்வ நிலை  மாற்றார்க்கு அது ஆற்றல் நிலை

தெரியாததை தெளிவதே நம்மறிவு        ஆராய விரும்பாததா நம்மறிவு?

கொலு மூலம் அறிவது இனிது            பொம்மை மூலம் உணர்வது எளிது

பொம்மைகளுக்கு ஆக்கம் தருவது மண்    ஆடி அடங்கி அடையுமிடமும் அதே மண்!

சமத்துவ படம் இருப்பது இதோ இங்கே              சரியான பாடம் இருப்பதும் இதோ இங்கே

மெய்ப்பொருளைத் தேடுக எங்கும் எதிலும் அப்பொருளைக் காண்க இங்கும் இதிலும்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment