Sunday, 4 July 2021

தஞ்சை இராசராச சோழன்

 

தஞ்சை இராசராச சோழன்

பெரிய கோயில் கண்ட தஞ்சை                பெரிய மதில் கொண்ட தஞ்சை

மக்களுக்காக மண் ஆண்ட மன்னன் மன்னர்களில் மன்னாதி மாமன்னன்

நன்செய் புன்செய் கொண்ட மண்                  நன் செயல்களின் மன்னன் ஆண்ட மண்

உயரிய மானம் காத்த மண்                  தற்காப்பில் வீரம் காத்த மண்

சுத்த ஆன்மீகம் தந்த மண்                          மிகுந்த செல்வம் வாய்ந்த மண்

தமிழுக்காக சரஸ்வதி மகால் அங்கே அரணுக்காக ஆழ அகழியும் அங்கே

சங்கீத வளம் மிக்க திருவையாறு                நெல் வளம் கொழிக்க பெரியாறு

மண் வெட்டி சாரம் கட்டிய ஊர்                        அது சாரப்பள்ளம் எனும் ஊர்

வேங்கைப் பள்ளம் பெரும் குளம் காசாங்குளம் எம்குல பேரின் குளம்

ஆலை இல்லா ஆலய தஞ்சை                  அபூர்வ மன்னனின் ஆனந்த தஞ்சை!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment