Sunday, 4 July 2021

இது ஒரு முடியின் குரல்

 

இது ஒரு முடியின் குரல்

உயிர் வேரோடு உயிரற்ற உறுப்போடு கருமையுடன் முளைத்தேன்!

முடி திருத்தம் முடி அலங்காரம் என பெருமையில் திளைத்தேன்!

எண்ணெய் தேய்த்து சூட்டைக் கிளப்பினாலும் பொறுத்தேன்!

சாயம் பூசி நிறத்தை மாற்றும் போது ஏற்க மறுத்தேன்!

சொட்டையாய்ப் போனாலும் ஓரமாக முளைத்து வந்தேன்!

மொட்டை அடித்தாலும் மீண்டும் மீண்டும் துளிர்த்து வந்தேன்!

கடவுளுக்கு காணிக்கை என்றால் மதிக்கப் பட்டேன்!

கடைகளுக்கு வாடிக்கை என்றால் மிதிக்கப் பட்டேன்!

மழிப்பவரின் அகம் குளிர துட்டுடன் வாழ்வைக் கொடுத்தேன்!

மழித்தவரின் முகம் மலர வெட்டுடன் மகிழ்வைக் கொடுத்தேன்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment