Saturday, 3 July 2021

பயிரும் உயிரும்

 

பயிரும் உயிரும்

பளிச்சென பார்வையில் படும் பயிர்! 

பச்சை பசேலென ஆடும் பயிர்!

மனித உயிர் காக்கும் பயிர்!

வைக்கோலாகி தீவனமாகும் பயிர்!

ஐ ஆர் 18 மிருதுவான அரிசி!

ஆடுதுறை 20 ருசியான அரிசி!

மேட்டில் விளையும் பொன்னி ரகம்!

ஏழடிவரை வளரும் திருச்சி 3 ரகம்!

கானி நிலமானாலும் கவுரவ எஜமான்!

நிஜமான நிலத்தை ஆளும் எஜமான்!

வியர்வையை விதைக்கும் எஜமான்!

உழைக்கும் தொழிலின் எஜமான்!

வேகமாக சுழன்று விட்டது உலகம்!

உழவை நிச்சயம் தொழும் உலகம்!

சிக்கன பெருவாழ்வில் விவசாயி!

ஆனந்த அக மகிழ்வில் விவசாயி!

உழவுத் தொழில் புவியில் அழியாது!

அழியுது என்போர் பொய் எடுபடாது!

நீர் வளத்தோடு நெல் நிறையும்!

பரந்த பூமியில் பஞ்சம் குறையும்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment