Saturday, 3 July 2021

கண்ணியமிகு கலாம்

 

கண்ணியமிகு கலாம்

கலாம் கண்ட கலம் விண்கலம்; கலாம் தொடுத்தக் கணை ஏவுகணை

கலாமின் வாழ்வு எளிய வழ்வு; கலாமின் வாழ்வு இனிய வாழ்வு

அடர் முடி முகத் தோற்றம்; கலை படர் முகத் தோற்றம்

அக அழகை முகத்தில் பெற்றார்; ஞானப் பொழிவும் முகத்தில் பெற்றார் 

உற்சாகப் படுத்திய உற்சாகப் பேச்சு; எழுச்சி ஊட்டிய எழுச்சிப் பேச்சு

ஊக்கப் பேச்சு இளைஞர்களுக்கு; ஆக்கப் பேச்சு அறிஞர்களுக்கு

ஏழை வீட்டில் பிறந்த மேதை; கண்ணியமாக வாழ்ந்து இறந்த மேதை

செய்தித் தாள் போட்டுப் படித்தார்; செய்தியில் செய்தியாகி நிலைத்தார் 

உண்மை உழைப்பு கருணைக்கும் கலாம்; நம்பிக்கை ஊக்கம் தூய்மைக்கும் கலாம்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment