எவ்வளவு எனக் கேட்போர்க்கு இவ்வளவு என்பார் இவர் அவ்வளவு முடியாது இவ்வளவுதான் என்பார் அவர்
இவ்வளவு பத்தாது கூட எவ்வளவு தருவீர் என்பார் இவர் எவ்வளவு கேட்டாலும் கூட இவ்வளவுதான் தருவேன் என்பார் அவர்
இவ்வளவைக் கேட்டதற்கே எவ்வளவுப் பேச்சு என்பார் இவர் அவ்வளவு பேச்சும் இவ்வளவைத் தரத்தான் என்பார் அவர்
அவ்வளவுதானா என முணுமுணுத்து அவரைப் பார்ப்பார் இவர் இவ்வளவுதான் என முணுமுணுத்து இவரைப் பார்ப்பார் அவர்
தைத்த செருப்பிற்குக் கையில் வாங்கி பையில் வைப்பார் இவர் தைத்த செருப்பைக் கையில் வாங்கி காலில் வைப்பார் அவர்!
தஞ்சை த.இராமநாதன்
No comments:
Post a Comment