பணமும் படமும்
புவி நோக்கி ஈர்ப்பது புவியின் விசை கவி நோக்கி ஈர்ப்பது கவியின் விசை
அகம் நோக்கிப் பார்ப்பது ஆக்கும் விசை புறம் நோக்கிப் பார்ப்பது அழிக்கும் விசை
குறை குட தண்ணி குதித்துக் கூத்தாடும் குறை உடை மேனி பணத்தைப் பார்த்தாடும்
படம் நோக்கியே அன்றும் ஓடியது கூட்டம் பணம் காட்டியே இன்றும் கூடுகிறது கூட்டம்
பணத்தில் காந்தியின் பாடு பெரும் பாடு பணத்தால் காந்தியின் நாடு தரும் பாடு
சிரித்துப் பார்க்கிறார் மதிப்பைக் கூட்ட சிரித்தே அழுகிறார் அவமதிப்பைக் காட்ட
பெண் பின்னே பணத்தைக் கட்டியது யார்? Pin இல்லாது பணத்தைச் சூட்டியது யார்?
பணத்தால் பாதை மாறுவதும் வேண்டாம் பணத்தால் போதை ஏறுவதும் வேண்டாம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment