வேகமும் விவேகமும்
உந்தி ஓங்கி உதைக்கும் வேகம்!
பந்தை பந்தாட புறப்படும் வேகம்!
வேகத்தோடு உதைத்கும் வேகம்!
பாசாங்கு இல்லா பசங்க வேகம்!
உதைத்தே ஆவேன் என்ற வேகம்!
உதைத்ததும் ஓட வைக்கும் வேகம்!
உடலுக்கு வலுவேற்றும் வேகம்!
உள்ளத்தில் துணிவேற்றும் வேகம்!
இடம் பொருள் ஏவலில்லா வேகம்!
விவேகத்தோடு வேண்டும் வேகம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment