Thursday, 1 July 2021

மகத்தான மருத்துவர்கள்

 

மகத்தான மருத்துவர்கள்

உடலோடு உயிரைச் சேர்த்து கடவுள் படைத்தார்!

உடலின் உயிரைக் காக்க மருத்துவர் கிடைத்தார்!

நலம் காக்கும் வளங்கள் கிடைக்க கடவுள் படைத்தார்!

நலம் காக்கும் மருந்தைக் கொடுக்க மருத்துவர் கிடைத்தார்!

உடலை விட்டு உயிர் பிரிந்தால் கடவுள் பார்த்துக் கொள்வார்!

உடலுடன் உயிர் இருந்தால் மருத்துவர் பார்த்துக் கொள்வார்!

மனிதனின் அறியாமையை கடவுள் சகித்துக் கொள்வார்!

மனிதனின் முடியாமையை மருத்துவர் சகித்துக் கொள்வார்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment