Thursday, 1 July 2021

ஒரே கொடி

 

ஒரே கொடி

நாட்டுக்கும் ஒரு கொடி!

போட்டிக்கும் அதே கொடி!

ஒற்றுமை உண்டாக்கும் கொடி!

வேற்றுமை உண்டாக்கவும் கொடி!

பல வண்ணத்தில் கொடி!

பல எண்ணத்திலும் கொடி!

கொடியால் வாழ்பவர் கோடி!

கொடியால் மாண்டவரும் கோடி!

கொடியால் பெறுவர் ஓட்டை!

கொடியால் பிடிப்பர் கோட்டை!

கொடியோடு கொடுப்பர் பாட்டை!

கொடியோடு கெடுப்பர் வீட்டை!

நாட்டுக்காக வெற்றிக் கொடி!

கட்சிக்காக காரியக் கொடி!

உலகிற்கு வேண்டும் ஒரே கொடி!

வேற்றுமை கலையும் நேயக் கொடி!

பசியைப் போக்க அன்னக் கொடி!

மனிதத்தைக் காக்க அன்புக் கொடி!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment