"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட" - சிலப்பதிகாரம்
விளக்கம்:
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.
Ref: https:/store.tamillexicon.com
எனது விளக்கம்: நல்லவனாகிய நீ வழிதவறி சென்று விட்டாய். உனது நேரம் முடிந்து விட்டது. வா வா... நீ போக வேண்டிய நேரம் வந்து விட்டது வா வா... என்பதைப் போன்று, கொடிகள் அசைந்து அசைந்து ஆடி அழைத்ததாம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment