வீர வணக்கம்
அஞ்சாத அண்ணனாக பெரியமருது
நிகரில்லா தம்பியாக சின்னமருது!
இன்று அண்ணன் பெறுவது ஆபத்து
தன் தம்பி மூலமே அந்த ஆபத்து!
வீரத்துக்கு கிடைத்தப் பரிசு தூக்கு
வீர வம்சத்தை அழித்த தூக்கு!
துரைசாமி கண் முன்னே தூக்கு
எந்த சாமியும் தடுக்காத தூக்கு!
சேக் உசேனுக்கு பெரிய சலாம்
வீரம் காத்த நல்லவருக்கு சலாம்!
நல்லோர் எல்லாம் அழிந்தனரோ?
வீரம் நேர்மை சேர்ந்து அழிந்ததோ?
நம் தலைமுறை அடிமை வம்சமோ?
ஜனநாயகத்திலும் இதே அம்சமோ?
கண் குளமானது நடந்ததை எண்ணி
மீண்டும் ஆளணும் ஏதாவது பண்ணி!
தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment