ஆயத்தம் ஆவோம்
உயிர் காக்கும் உபகரணத்திற்கு பூஜை!
மானம் காக்கும் தற்காப்பு கருவிக்கு பூஜை!
அறிவு வளர்க்கும் நூல்களுக்கு பூஜை!
ஆவலோடு அவல் சாப்பிடவும் பூஜை!
ஆசை தீர சுண்டல் சாப்பிட பூஜை!
மரவள்ளிக் கிழங்கு மணமணக்கும் பூஜை!
மரக் கலப்பை போய் போஸ் கலப்பைக்கு பூஜை!
போஸ் கலப்பை போய் டிராக்டர் கலப்பைக்கும் பூஜை!
ஈட்டியோடு வேலுக்கும் பூஜை!
வெட்டு அரிவாளோடு வீச்சு அரிவாளுக்கும் பூஜை!
சந்தனத்தோடு பொட்டு வைத்துமங்களகர பூஜை!
வாழை இலையிட்டு கமகமக்கும் சாம்பிராணியோடு பூஜை!
அர்த்தங்கள் ஆயிரம் உள்ள ஆயுத பூஜை!
உணர்வு கலந்த நல்லறிவை கூர்மையாக்கும் பூஜை!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment