Wednesday, 7 July 2021

நன்றி கலந்த உறவு

 

நன்றி கலந்த உறவு

இது வெள்ளை நிற நாய்க்குட்டி!

இது வெள்ளை உள்ள நாய்க்குட்டி!

கண்ணால் சிரிக்கும் நாய்க்குட்டி!

வாளி வீட்டு வாலு நாய்க்குட்டி!

நாய்க்குட்டி நண்பன் கடைக்குட்டி!

அடிக்கடி உறவாடும் கடைக்குட்டி!

இதமாய் தடவுவான் கடைக்குட்டி!

சுகமாய் நெகிழும் நாய்க்குட்டி!

ஐந்தறிவோடு கலந்த ஆறறிவு கூட்டு!

அன்பால் இணைந்த பாசக்கூட்டு!

நன்றி மறவா நட்பின் கூட்டு!

பணத்திற்கு வேஷம் போடா கூட்டு!

தூரத்தில் இருந்தே மணம் அறியும்!

பக்கத்தில் வந்தால் மனம் அறியும்!

பார்க்காமல் தொடரும் நட்பு இது!

பார்த்ததும் மிளிரும் நட்பு இது!

நன்றி மறவா உண்மை உறவு!

அரணாக இருந்து காக்கும் உறவு!

அன்றும் இன்றும் மாறா உறவு!

யாராலும் பிரிக்க முடியா உறவு!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment