Wednesday, 7 July 2021

பராமரிப்பு அவசியம்

 

பராமரிப்பு அவசியம்

கூட்டிப் பெருக்கினால் போதாது கூட்டியதைக் கழிக்க வேண்டும்!

கழிவுகளை கூட்டிப் பெருக்கினாலும்

போதாது கொளுத்தி எரிக்க வேண்டும்!

கூட்டக் கூட்ட கழிவை பெருக்கிக் கொண்டே போவதும் தவறு!

வழியை வகுத்து கழிவை உரிய இடத்தில் போடாததும் தவறு!

பொறுக்கி எடுத்து கழிவை வகையுடன் பிரித்து எடுப்பது நல்லது!

மறுசுழற்சி செய்து மறுபயனீடு செய்தால்  உலகிற்கே நல்லது!

நல்லதை செய்யும் நல்லவர்களை போற்றி புகழ்வோம்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment