மனித அறிவை தீட்டும் படிப்பு படிக்கப் படிக்க கூடும் படிப்பு
வண்டிக் கட்டி படிச்சப் படிப்பு பட்டித் தொட்டி பரவியப் படிப்பு
முதலாவதாக மன்னார்குடியில் புரட்சி அது அறிவுக் கண்ணைத் திறந்தப் புரட்சி
கனகசபை மூலம் அந்தப் புரட்சி பிள்ளைகள் யாவும் படிக்கப் புரட்சி
அகத்தின் ஊற்றில் அறிவு இருக்கும் நூலகம் உள் அறிவகம் இருக்கும்
புத்தகம் உள் தெளிவகம் இருக்கும் அகம் தெளிந்து ஒளியாய் இருக்கும்
அறியாமைப் போக்க பயிலகம் வருக இருளைப் போக்க நிலவிடம் வருக
இளமையில் கற்று பெருமைப் பெறுக முதுமையில் கற்று புதுமைப் பெறுக
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment