எங்கும் நிறைந்த வளமே!
வட்டிக் கடனோடு வாகனம் வாங்கி EMI கட்டி நொந்தோம்
விலைக்கு ஏத்தபடி புகையைக் கக்கி மாசைக் காட்டி மாசைத் தந்தோம்
நாடெல்லாம் என்னென்னவோ நிறுவனங்களை நிறுவி விட்டோம்
நிர்வாகம் சரியில்லாத நிர்வாகத்தால் காற்றின் தரத்தை தாழ்த்தி விட்டோம்
ஜன்னலை எல்லாம் இறுக்கிப் பூட்டி காற்றோட்டோத்தை தடுத்து விட்டோம்
காற்றுப் பதனாக்கியைப் பயன்படுத்தி உடல் நலத்தை கெடுத்து விட்டோம்
இந்த நிலையை மாற்ற...
சூரியனிலிருந்து மின்சாரம் தயாரிக்க முயற்சி எடுப்போம்
பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி எடுப்போம்
காட்டைக் காக்க பசுமைப் புரட்சி செய்வோம்
வீட்டைக் காக்க புதுமைப் புரட்சி செய்வோம்
அந்த நிலை மாறி...
மென்மையுடன் தவழ வேண்டும் தென்னங் காற்று
தென்னந் தோப்பில் நின்று பாட வேண்டும் தெம்மாங்குப் பாட்டு
முகிலோடு முகில் விளையாடி குளிரைத் தர வேண்டும் காற்று
குளிர்ந்த பின் முத்தான மாமழையைப் பொழிய வேண்டும் காற்று
நோய் தீர்க்கும் மருந்தாக பாரெங்கும் வீச வேண்டும் காற்று
ஒறு புறம் நுண் உயிரிகளை வாழ விடணும் காற்று
மறு புறம் மனிதர்களையும் வாழ விடணும் காற்று
ஐம்பூதங்களிலும் கலந்தது காற்று அகிலம் யாவும் நிறைந்தது காற்று
உயிரைக் காக்கும் காற்று நம் உயிர் மூச்சே காற்று
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment