பெயர் பெற்ற நாள்
பாகப்பிரிவினை தருது தீவினை பங்காளி உள் நிகழுது தீவினை
பல மாநிலத்தை பிரித்துப் பிரிவினை சிலமா நிலத்திலும் அதே பிரிவினை
ஒரு தாய் மக்களிலும் துரோகம் ஒரு தேச மக்களிலும் துரோகம்
கூறு போட்டு கூவும் மானிடா வீட்டின் குறையை பாரு மானிடா
கடலும் மாறியது உயர் மலையாக மலையும் நிற்காது அதே நிலையாக
மண்ணின் பிடி ஆண்டவன் கையில் மனிதனின் பிடி மண்ணின் கையில்
நிலத்தை ஆளும் ஆணவ ஆட்சி அவன் நினைத்தால் முடியும் காட்சி
எல்லைக் கோடு தேசத்தின் கேடு எல்லை இல்லா எல்லையைத் தேடு
நடந்தது மறந்து கடந்து வாழணும் நடப்பது நன்றாய் கடந்து வாழணும்
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment