புளிப்போடு இனிப்பு
அந்தக் கால கருப்புத் திராட்சை!
புளிப்போடு இனிப்பான திராட்சை!
கஞ்சம் அற்று விளைந்த திராட்சை!
பலமுள்ள கொட்டைத் திராட்சை!
பச்சை பச்சையாகவே பழுக்காமல்
செங்காயாகி பழுத்தத் திராட்சை!
கொட்டை இல்லா பச்சைப் புதுசு
விலையோடு புதுசுக்குதான் மவுசு!
ஒரே கொடியால் பல நன்மைகள்
பல கொடிகளால் சில நன்மைகள்!
கனியோடு சுமைதாங்கும் இக்கொடி
கனிவோடு வாழும் இப்படக் குடி!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment