மனிதமும் கெட்டுப்போன மனித இனங்களா?
மனமும் கெட்டுப்போன மனித இனங்களா?
யார் பெற்ற பிள்ளையோ இது?
எதற்காகப் பெற்றார்களோ அதை?
வெறிப் பிடித்தக் கூட்டத்தின் ஆட்டமா இது?
நெறி கெட்டுப் போய் ஆடும் கூட்டமா இது?
இரக்கமற்ற கொடும் அரக்கர்களா இவர்கள்?
உழைக்க முயலாதக் கிறுக்கர்களா இவர்கள்?
சிசுவதையை அறியாத முட்டாள் மாக்களா?
விழிப்புணர்வே இல்லாத வீண் பதர்களா?
பச்சிளங் குழந்தை பயப்படுவதைப் பார்த்தீர்களா?
பகுத்தறிவு வீழ்ச்சியில் பாடம் கற்றீர்களா?
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment