Saturday, 12 June 2021

இன்றைய விவசாயமும் விவகாரமும்

 

இன்றைய விவசாயமும் விவகாரமும்

விவசாயம் என்றால் லாபம் இல்லா தொழிலா?

விவசாயி என்றால் வசதி இல்லா நபரா?

விவசாயம் என்றால் தரம் தாழ்ந்த தொழிலா?

விவசாயி என்றால் விவரம் இல்லா நபரா?

பதில்: இல்லவே இல்லை

விவசாயம் என்றால் ஏழைகளின் தொழிலா?

விவசாயி என்றால் தினமும் 8 மணி நேரம் உழைப்பவரா?

விவசாயம் என்றால் வானம் பார்த்த பூமியின் தொழிலா?

விவசாயி என்றால் வறுமையில் வாடும் நபரா?

பதில்: இல்லவே இல்லை

விவசாயம் என்றால் இயற்கை முறை தொழிலா?

விவசாயி என்றால் பயிர்க் கடனை திருப்பி கட்டுபவரா?

விவசாயம் என்றால் இயந்திர மயம் ஆகாதத் தொழிலா?

தான் உண்டு வேலை உண்டு என வாழ்பவரா விவசாயி?

பதில்: இல்லவே இல்லை

விவசாயம்தான் உலகில் நிரந்தரமான தொழிலா?

விவசாயிதான் பசியின்றி வாழப் போகும் நபரா?

விசாயம்தான் நிரந்தரமான வருமானம் தரும் தொழிலா?

விவசாயிதான் நிம்மதியுடன் தூங்கி எழப்போகும் நபரா?

பதில்: ஆமாம் ஆமாம்

ஆம் ஆமாகவே இருக்க வேண்டும்!

ஆமை இல்லை என்பதும் மாற வேண்டும்!

பசியில்லா நிலை பாரினில் நிலைக்க வேண்டும்!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் நிலை தொடர வேண்டும்!

 - தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment