Wednesday, 9 June 2021

எல்லையைத் தாண்டாதே

 

துள்ளாத மீன் ஒன்று துள்ளுதே அது துள்ளியே சேதி ஒன்றைச் சொல்லுதே 

நீர் வாயு போதாதா மீனின் பிராணனுக்கு?    நில வாயு பொருந்துமா மீனின் நலனுக்கு?

உன் வரம்பை மீறித் துள்ளாதே மீனே          அழிவைத் தேடிக் கொள்ளாதே உனக்கு நீனே

மானாக இருந்தால் துள்ளினும் ஓடலே அழகு  மீனாக இருப்பதால் மூழ்கினும் நீந்தலே அழகு

அமைதியான மனிதனோ என்றென்றும் சாந்தியோடு வாழலாம்                                            அழகான மீனோ என்றென்றும் நீந்தியோடி வாழலாம் 

தண்ணீரில் நீந்தி மின்னாத நீனோ செம்மீன் விண்ணில் தங்கி மின்னுவதேனோ விண்மீன்!

- தஞ்சை த இராமநாதன்

2 comments: