Saturday, 28 February 2026

இலவயம் ஏலேல்

 

இலவயம் ஏலேல்

இலவசத்தை வாங்கும் நிலையில்       உலகில் அதிக ஆட்களும் உண்டு
இலவசத்தைக் கொடுக்கும் நிலையில் உலகில் அதிக அரசுகளும் உண்டு

ஒருசாரார் வெவ்வேறு விதமாக வாழ்க்கைக்காக அள்ளிக் கொடுத்து வாழ வைக்கின்றார்கள்
மறுசாரார் வேறொரு விதமாக வாக்கிற்காக கிள்ளிக் கொடுத்து வீழ வைக்கின்றார்கள்

இலவசத்தை வாங்க ஏங்கி எதிர்பார்க்கும் நிலையில் இருந்தால் ஐயோ பாவம்
இலவசத்தை வாங்கி உரிமையை விற்கும் நிலையில் இருந்தால் ஐயையோ பாவம்!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments: