ஆன்றோர் வழி நடந்திடு
ஆன்றோர் என்பாரை ஆண்டோர் என்பாரும் உலகில் உண்டு
ஆன்றோர் என்பாரை ஆளப்போவோர் என்பாரும் உலகில் உண்டு
ஆறறிவைக் கொண்ட அனைவரும் அன்றும் ஆன்றோராக வாழ்ந்ததுமில்லை
பகுத்தறிவைப் பேசும் அனைவரும் இன்றும் ஆன்றோராக வாழ்வதுமில்லை
கற்றதைக் கசடறக் கற்றவரே அன்றும் இன்றும் என்றும் ஆன்றோர்
கற்ற கல்வியின்வழி மாசற்ற வாழ்வை வாழ்பவரே என்றென்றும் ஆன்றோர்
ஆன்றோர் நடந்த வழி எவ்வழியோ அவ்வழியே நடந்து நலம் பெறுவோம்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment