அன்னையரைப் போற்றுவோம்
தாங்க முடியாத மனவலியை
அம்மா என இதயத்தில் ஒலித்தால்
வலித்த வலியை ஓடவிடும் அன்னையரைப் போற்றுவோம்
தூங்க முடியாத உடல்வலியைத் தாயே என கதறிக் கண்ணீரில் நனைந்தால் கண்ணீரைத் துடைத்து அணைத்துக் காத்திடும் அன்னையரைப் போற்றுவோம்
உயிர் கொடுத்து உருவம் கொடுத்த அன்னையரைப் போற்றுவோம்
வளர்த்து எடுத்து வடிவம் கொடுத்த அன்னையரைப் போற்றுவோம்
பிறந்தது முதல் இறக்கும் வரை மறைந்தாலும் மறக்க முடியாத அம்மாவைத் தாயேயென அழைத்து நமது அன்னையரைப் போற்றுவோம்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment