Wednesday, 7 January 2026

காரசாரம்

 

காரமாக உணவை உண்டால் கண்ணில் கண்ணீர் சொட்டாகச் சொட்டும்
காரசாரத்தையே உண்டால் கண்ணில்    கண்ணீர் மழையாகக் கொட்டும்

காரசாரத்தோடு பேசும் பேச்சினால் கேட்பவருக்கு உணர்ச்சி பொங்கிடும்
சாந்தத்தோடு சரளமாகப் பேசினால் கேட்பவரின் உள்ளம் குளிர்ந்திடும்

காரசார உணவை ஒதுக்கிடுவோம் கலாசார மாண்போடு உண்டிடுவோம்                            இனிய சொற்களைப் பேசிடுவோம் தேனான தமிழைக் கேட்டிடுவோம்!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment