உண்மை ஊமையாகி உறங்குமா?
உண்மைகள் வாயை மூடிய பயத்தோடு ஓரமாக ஒதுங்கி அழுவதாக எண்ணி பொய்யர்கள் பல்லைக் காட்டி ஆட்டம் போடுகின்றனர் பெரும் ஆடம்பரம் பண்ணி
உண்மை வாய்திறந்து உரிமையோடு தலைநிமிர்ந்து உரைக்கும் பொழுதுதான் பொய்மை வாய்ப்பிளந்து சிறுமையோடு தலைகவிழ்ந்து மரிக்கும் பொழுது
உண்மையான அன்பிற்கு பொய்யான உறவுகள் அதிகரித்ததோ பாவம் பொய்யான உறவுகளுக்குள் மெய்யான பிளவுகள் உருவெடுத்திடுமே பாரும்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment