சோகம் தன்னுள் சுகமாகக் குடிக் கொண்டு விட்டால் சோகம்தான் சுகமெனத் தானே முடிவு செய்தல்தான் விதியோ?
சுகம் தன்னுள் யுகமாகக் குடிக் கொண்டு விட்டால் சுகம்தான் நிலையெனத் தானே முடிவு செய்தல்தான் மதியோ?
வாழ்ந்தது போதுமெனச் சோர்ந்தே வாழும் வாழ்வு சோகமான வாழ்வுமில்லை வாழும்போதே சேர்ந்து வாழாது வாழும் வாழ்வு சுகமான வாழ்வுமில்லை
பணத்திற்காகப் பாசத்தை இழந்தோர்க்குப் பாவம் பண்ணிய மாசான வாழ்க்கை பாசத்திற்காகப் பணத்தை இழந்தார்க்கோ சாபம் பிண்ணிய மோசமான வாழ்க்கை
பாவப்பட்ட பலதரப்பட்ட அப்பாவிகள் கண்ணியமாகக் கரைச் சேரட்டும் பாவம் செய்தே பழக்கப்பட்ட பாவிகள் புண்ணியமானப் பேரைச் சேர்க்கட்டும்!
- தஞ்சை த.இராமநாதன்

👍👌💯
ReplyDelete🙏
Delete👍
ReplyDelete🤝
Delete👏👍
ReplyDelete🤝
Delete