Tuesday, 2 September 2025

சாப்பாட்டை உண்டோர்

 

சாப்பாடு உண்டா என்றால் விருந்தே உண்டென உணவளிப்பர்
சாப்பாட்டைச் சாப்பிட்டால் உண்டதும்      உண்டதை உணவென்பர்
உண்ட களைப்பு தொண்டனுக்கும்      உண்டபின் உண்டாகுமென்பர்
உண்ட உணவு சரியில்லையாகில்      சாப்பாடே சரியில்லையென்பர்
உண்டு கொழுத்து உடம்பை வளர்த்தார் உணவில்லாரின் உணர்வை உணரார்
பகுத்து உணவை நிரவி உண்ணாதோர் உயிரின் உரிமையை உணராதார்!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments: