Tuesday, 29 July 2025

மாலையில் பூக்களின் சங்கமம்

 

காலையில் பூத்த பூவை மாலையில் கோர்த்தாலும் கோர்த்த மாலையின் மணத்திற்கு மாலைவரைக் காத்திருக்கத் தேவையில்லை

மாலையில் பூத்த பூவை காலையில் பறித்து மாலையாகக் கோர்க்கப்பட்ட மணமாலைக்கு மாலையானாலும் காத்திருக்காவிடில் திருமணம் சிறப்பதில்லை 

மொட்டைப் பறித்துக் கோர்த்துக் கட்டினாலும் பூவாகி மணக்கும்
பூவைப் பறித்துக் கோர்த்து
கட்டினால் பூவாகவே மணக்கும்

மலராத மொட்டினால் மணத்தை வெளியேற்ற மனமே வராது
பூத்த மலரினால் மணத்தை வெளியேற்றாத குணமே இராது

காலையோ மாலையோ எப்போது பூக்களைக் கூட்டிச் சேர்த்தாலும் மாலையான மலர்களின் ஒற்றுமையில் மங்களகரம் எப்போதும் மங்காது!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments: