அழகாக இருந்தால் அழகைக் காட்டி விற்பனை
அழகற்று இருந்தால் அழகைக் கூட்ட ஒப்பனை
அறிவோடு இருந்தால் அறிவைக் காட்டி விற்பனை
அறிவற்று இருந்தால் அறிவைக் கூட்டப் பாவனை
இளமையாக இருந்தால் உடலே தேடிடும்
தீவினை
முதுமையாக இருந்தால் உடலே நாடிடும் ஓய்வினை
தொழிலிருந்தால் உயர்த்தி விடும் விற்பனை
தொழிலைத் துறந்தால் தாழ்த்தி விடும் விற்றவனை!
- தஞ்சை த.இராமநாதன்

நிசம்தான்.
ReplyDelete🤝
ReplyDelete