வந்தாரை எல்லாம் வாழ வைத்த வர்க்கத்திடம் இல்லையா நாகரீகம்?
வந்த இடத்தில் எல்லாம் வீழ வைத்த வர்க்கத்திடம் இருக்கிறதா நாகரீகம்?
திருக்குறளைத் கொண்டு உலகப் புகழ் பெற்றவர்களிடம் இல்லையா நாகரீகம்?
நரிக்குரலைக் கொண்டு உலக இகழ் பெற்றவர்களிடம் இருக்கிறதா நாகரீகம்?
கங்கையில் நீரை எடுத்து வந்து கோயில் கட்டிய இனத்திடம் இல்லையா நாகரீகம்?
காவிரியில் நீரைத் தடுத்து வந்து நாவில் ஓட்டிய இனத்திடம் இருக்கிறதா நாகரீகம்?
ஐந்தாறு நாடுகளில் என்றும் ஆளுமைக் கொண்டவர்களிடம் இல்லையா நாகரீகம்?
ஆறேழு மாநிலங்களில் இன்றும் அனுமதிப் பெறாதவர்களிடம் இருக்கிறதா நாகரீகம்?
நிலவைப் பார்த்து தாய் உரைக்கும் தமிழ்ப் பாடலில் இல்லையா நாகரீகம்?
நிலவைப் பார்த்து நாய் குரைக்கும் குட்டாக் கூச்சலில் இருக்கிறதா நாகரீகம்?
- தஞ்சை த.இராமநாதன்

👍
ReplyDelete🤝
Delete