Friday, 31 January 2025

இராமநாதபுரத்தில் கல்லணை

காலைப் பொழுதின் கதிரவன் ஒளியில்    நானும் கருணாநிதியும் நடந்தோம்                            காலளவு ஓடிய கல்லணைக் கால்வாய் பாலத்தில் கால் வைத்துக் கடந்தோம்

பாலத்தில் தவழ்ந்த காற்றோசையில் கரிகாலனென இசைக்கக் கேட்டோம்
பரந்து விரிந்த அரசமரம் அசைந்தாடப் பறவைகள் பறந்தோடக் கண்டோம்

கல்லணைக் கண்ட சோழனைப் போல் கள்ளமில்லா களிப்போடு மகிழ்ந்தோம்
ஆற்றங்கரையோரக் கடைக்குப் போய் ஆற அமர சூடான தேநீரை நுகர்ந்தோம்

நண்பர்கள் நடந்தது தஞ்சை தரணியின் நீலகிரி கோட்டத்தில் இராமநாதபுரம்
இராமநாதன் கவிதைத் தோட்டத்தில் மலர்ந்த பூவினால் கிடைத்ததுப் பெருமிதம்!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments:

  1. நுகர்ந்தது தேநீரை ஆனால் அங்கே பருகியது கவிதையை. வாழ்த்துக்கள்

    ReplyDelete