அடை மழையில் அடுப்பும் எரியாது
அடுத்த வேளை சாப்பிட வழியும் தெரியாது
உள்ள உணவைப் பங்கிடவும் புரியாது
பசித்த வயிறு பாதி அளவும் நிறையாது
நடுங்கிய உடல் குளிரையும் தாங்காது
படுத்தால் கண்ணில் தூக்கமும் வராது
இதைப் பிள்ளைகள் அறவே அறியாது
அன்னையவள் வயிறு எரியும் பசியால்
பசியின் எரிவை அன்னையும் அறிவாள்
பசி தாங்க முடியாது பச்சிளம் பிள்ளையால் தாங்க முடியாததால் தாய்தான் அழுவாள்
எங்கோ சென்றனர் தான் பெற்ற பிள்ளைகள்
என்றோ வருகின்றனர் தன் பேரப் பிள்ளைகள்
அன்று பிள்ளைகளைப் பார்த்து அழுததும் தாயே
இன்று பிள்ளைகளைப் பார்க்காது அழுவதும் தாயே!
- தஞ்சை த.இராமநாதன்

நன்று 😢
ReplyDelete🙏🙏
Delete🙏🙏🙏
ReplyDelete🤝🤝
Delete