Thursday, 16 January 2025

காணும் பொங்கலும் வேண்டும்

 

அன்று கண்டதும் காணும் பொங்கல்
இன்று காண்பதும் காணும் பொங்கல்
என்று கண்டாலும் காணும் பொங்கல்
நல்லதைக் காணவே காணும் பொங்கல்

கண்டதைக் காணக் காணும் பொங்கல்
காண்பதைப் பேண காணும் பொங்கல்
கண்டு களிக்கவும் காணும் பொங்கல்
உண்டு திளைக்கவும் காணும் பொங்கல்

இந்த பொங்கலில் காண முடியாத இடம் போனவர்களுக்காகவும் வேண்டுவோம்
இந்த பொங்கலில் காண்பவரை வரும் பொங்கலில் காணவும் வேண்டுவோம்!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments: