Friday, 25 October 2024

அந்த நாள் தீபாவளி

 


விடியற்காலையில் தூக்கம் கலைந்து அலுப்போடு எழுந்து

எண்ணெயை உச்சந்தலையில் கையால் சூடேறத் தேய்த்து 

அடுப்பின் அனலில் காய்ந்த வெந்நீரை மெதுவாக மொண்டு 

வெந்நீர் ஊற்றுமுன் அரப்பை பக்குவமாகத் தலையில் தேய்த்து 

தலையில் சுடுநீரை ஊற்றி அரப்புச் சுவையை சுவைத்து

அரப்பு கண்ணில் பட்டு வழியும் கண்ணீரைப் புதுத் துண்டால் துடைத்து

பொத்தானைக் கழற்றி மணம் வீசும் புது உடையை உடுத்தி,

ஆனந்தமாய் உலா வந்த நாளே அந்த நாள்!

- தஞ்சை த.இராமநாதன்


6 comments: