விளக்கமாறு சீவால் வெடியில் சொருகி
விலகி நின்று விளக்கில் பற்ற வைத்து
சிறு சீனி வெடியை வெடிக்கக் கற்றுக் கொடுப்பார் அப்பப்பா பிச்சைக்கண்ணு
எத்தனைப் பேர் எதனைப் பேசினாலும் தன் கடமையைத் தவறாது செய்து மறவாது பலகாரத்தைக் கொடுப்பார் எதார்த்தமான சின்னம்மா தீர்த்தம்மாள்
ஆடும் பல்லால் அவதி அடைந்து அதைப் பிடுங்கச் சொல்வார் அய்யாவு தாத்தா
பழுதான பல்லைப் பக்குமாய்ப் பிடுங்கி பலகாரம் சாப்பிட வைப்பேன் நான்
தீபாவளி வேளையில் வேலை செய்ய அனைவரும் அவசரத்தில் இருப்பர் அமைதியாய் அமர்ந்து நடப்பதைப் பார்ப்பார் ஆயிப்பிள்ளை அம்மாயி!
- தஞ்சை த.இராமநாதன்

✨🙏👏
ReplyDelete🤝🤝
DeleteMemorize old is gold 🤝👌
ReplyDelete🤝
ReplyDelete